வெலிகடை பழைய கோட்டை வீதி பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் இரண்டு சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பெண்கள் மற்றும் ஆண் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு புதுகடை மேல் நீதிமன்றத்தில் அனுமதியுடன் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இரண்டு ஆண்கள், விபச்சார விடுதியின் முகாமையாளராக செயற்பட்டு வந்துள்ள நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார்
மஹரகம, பண்டாரகம, பாணதுறை மற்றும் ஹகுரம்பட பிரதேசங்களினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று கொழும்பு புதுகடை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளது.