கொத்து கொத்தாய் சடலங்களுடன் கரை ஒதுங்கிய கப்பல்!

கொத்து கொத்தாய் சடலங்களுடன் ஜப்பான் கடற்கரையில் கரை ஒதுங்கிய வடகொரிய கப்பலால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

வடகொரியாவில் இருந்து கப்பல்கள் திசைமாறி ஜப்பானில் கரை ஒதுங்குவது சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரம் ஜப்பானில் கரை ஒதுங்கிய கப்பல் ஒன்றில் இருந்து 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் இதுபோன்று 104 கப்பல்கள் ஜப்பானில் கரை ஒதுங்கியுள்ளது.

இதுபோன்ற கைவிடப்பட்ட கப்பல்கள் ஏன் ஜப்பான் கரையில் ஒதுங்கிறது என நிபுணர்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.

ஆனல் வடகொரியாவில் போதிய உணவு இல்லாத காரணங்களாலையே மீன் பிடிக்க சென்ற மக்கள் கப்பல்களில் சடலங்களாக கரை ஒதுங்குகிறார்கள் என சில அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து இதுபோன்ற கைவிடப்பட்ட கப்பல்கள் கரை ஒதுங்குவது என்பது வடகொரிய ஜனாதிபதியின் இரும்பு கரம் வலுவிழந்து வரைவதையை காட்டுகிறது எனவும் சில கருத்து தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவில் 3 ஆண்டுகள் குடியிருந்து ஆய்வுகள் மேற்கொண்ட லண்டன் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர், அந்த நாட்டில் சமூக கோட்பாடுகள் அனைத்தும் சிதைந்து போயுள்ளது.

மக்கள் உயிர்வாழ கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளால் அவர்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாய்ப்புகளை பயன்படுத்தும் மக்கள் அங்கிருந்து தப்புவதற்காக உயிரை கடலில் இழப்பதாகவும், அதனாலையே கரை ஒதுங்கும் கப்பல்களில் சடலங்கள் மீட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.