தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த தளபதிகள் வடக்கு கிழக்குக்கு!

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியேறியிருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்த கேணல் ரமேஸ் உட்பட 63 தளபதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்திற்கு பின்னர் புனர்வாழ்வு பெற்ற ஜேந்தன் படையணியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிளவுபட்டபோது குறித்த மாகாணத்தை விடுதலைப் புலிகள் தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முயற்சித்தனர்.

இந்த நடவடிக்கைகளுக்காக கடல் மற்றும் தரைவழிப்பதை ஊடக 400க்கும் மேற்பட்ட போராளிகள் கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்தனர்.

இதேவேளை காட்டு வழிப்பாதையூடாக கேணல் ரமேஸ் உட்பட 63 தளபதிகளுடன் பல போராளிகள் வடக்கிற்கு சென்றிருந்தனர்.

இவ்வாறு வடமாகாணத்திற்கு சென்றவர்களில் கேணல், லெப்ரினன் கேணல், மேஜர், கப்டன் பதவி நிலையுடன் இருந்த போராளிகள் அதே பதவி நிலையுடன் இறுதிப்போரை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.