பொது மக்களை கடும் சோதனைக்கு உட்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றிருந்தது.

இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கூட்டத்திற்கு வருகைத்தந்த பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர் என அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூரண உடல் பரிசோதனை மற்றும் உடமைகள் அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனைவருக்கும் உள்ளே செல்ல அனுமதிக்க பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சோதனை நடவடிக்கையினால் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததுடன், விசனங்களை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.