இந்தியாவில் மதில் சுவரில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனிதனின் தலை இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தெலுங்கானாவின் Nalgonda நகரில் உள்ள மதில் சுவர் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவரின் தலை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவரின் பெயர் Ramesh எனவும் 25 வயது மதிக்கத்தக்க இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்துவந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
ஞாயிறு அன்று இரவு மருத்துவாங்கிவிட்டு வருவதாக சென்ற ரமேஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இந்த கொலையை செய்த நபர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்றும் வேலை பார்த்து வந்த டிராக்டர் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரத்தில் அந்த பகுதியில் நடந்த இரண்டாவது கொலை இது என்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 24-ஆம் திகதி நல்கொண்டா நகராட்சி தலைவரான லட்சுமியின் கணவர் ஸ்ரீனிவாஸ் மர்மமான நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.