கைப்பேசி பயன்படுத்தும் அனைத்து சகோதரிகளுக்கும்!

உங்கள் அன்ரோய்ட் போன்களை தவறான வகையில் பயன்படுத்த வேண்டாம். தாம் தனிமையில் இருக்கும் போது அந்தரங்கமான போட்டோக்களை எடுக்கின்றீர்கள். அதை நீங்கள் பார்த்துவிட்டு சாதாரண நிகழ்வாக அதனை உங்கள் கைபேசியிலிருந்து அழித்து விட்டுச் சென்றிருப்பீர்கள்….அத்தோடு அவ்விடயம் முடிந்து விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்…அது உங்கள் அறியாமை மாத்திரமே.உண்மையில் உங்களால் அழிக்கப்பட்ட அத்தனை போட்டோகக்களையும் மீளவும் பெறக்கூடிய செயலிகள் பலவும் இன்று பாவனைக்கு வந்துள்ளன  என்பதை நீங்கள் அறிவீர்களா….?

நீங்கள் தொலைபேசி திருத்துவதற்கு கடைகளுக்கு செல்லும் போது உங்களுக்கே தெரியாமல் உங்களால் அழிக்கப்பட்ட உங்கள் அந்தரங்க போட்டோக்கள் அக்கடைக்கார்கள் சேகரித்துக் கொள்ளும் சம்பவங்கள் பல நடைபெற்று வருவதை அறிய முடிகின்றது…

பெண்களே உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்…. …

அந்தரங்கமான புகைப்படங்களை தவிர்த்திடுங்கள்…உங்கள் கணவர் அல்லது காதலன் என் யாருக்காகவேனும் அம்முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்…….இன்றைய இணைய உலகில் உங்கள் அந்தரங்கத்தையும் வெளிப்படுத்த பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர்…. உஷாராகுங்கள்….பழுதான உங்கள் தொலைபேசியைத் திருத்தும் போது  பெறப்பட்ட புகைப்படங்களை வைத்து, உங்களை பணியவைத்து உங்களது வாழ்க்கையை சீரழிக்க சந்தர்பத்தை ஒரு போதும் வழங்காதீர்கள்……