வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகையில் முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு.
நாளை மாலை 6.25 முதல் இரவு 7.25 வரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் மறைந்து இயல்பு நிலையை அடையும் நிலா மீது, வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம், நிலாவை அடைவதால் நிலா சிவப்பாக தோன்றும் 2-வது அரிய நிகழ்வு தோன்றும்.
150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது. நிலா பூமியை சுற்றிவரும்போது மாதம் ஒரு முறை பூமியை நெருங்குகையில் நிலா வழக்கத்தைவிட பெரிதாக தோன்றும். சூப்பர் மூன் எனப்படும் இந்த 3-வது அரிய நிகழ்வும் சந்திர கிரகணத்தின்போது தோன்றுகிறது.