கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளம் துறைமுகம் அமைக்க துறைமுக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவளம் மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களுக்கு இடையிலான பகுதியில், சர்வதேச துறைமுகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துறைமுக பணிகளை விரைவாக துவங்க வலியுறுத்தி, துறைமுக ஆதரவு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். மேலும் , மீனவர்களை சிலர் தூண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.