குடும்பத் தகராறினால் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்!!

கொடிகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத் தலைவர் சடலாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் கச்சாய் வீதியில் உள்ள வீட்டில் நேற்று இடம்பெற்றது.கொடிகாமத்தை சேர்ந்த 49 வயதான ஆறுமுகம் நாகராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.குடும்ப பிணக்கு காரணமாக மனைவியையும் பிள்ளைகளையும் கடந்த 9 மாதங்களாக பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

அவர் அணிந்திருந்த சட்டையினுள் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று குறிப்பு எழுதி வைத்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொடிகாமம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.