இலங்கை வந்த ஆணும் பெண்ணும் செய்த செயல்!

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த இரு வெளிநாட்டவர்கள் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் ஜேர்மன் நாட்டு பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விதிமுறைகளை மீறி, எல்ல பிரதேசத்தில் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமையினால் அவர்களை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றலா வீசாவில் வருகைத்தந்து விற்பனையில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்ததாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.