சொக்க வைக்கும் அழகு பெற வேண்டுமா?

உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என கொண்டாடப்படும் பழங்களில் ஒன்று அத்திப்பழம். ஃப்ரஷ்ஷான பழமாக இருந்தாலும் சரி காய்ந்து உலர்ந்த பழமானாலும் சரி உடல்நலத்திற்கு மிகவும் நல்லது தான்.

அதில் விட்டமின்ஸ்,மினரல்ஸ்,ஃபைபர் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கும். தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் அத்திப்பழத்தினால் நம் சருமத்திற்கும் ஏராளமான நன்மைகள் உண்டு.

கரும்புள்ளி:

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை அழிக்கக்கூடியது. இரண்டு அத்திப்பழங்களை எடுத்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். வாரத்தில் மூன்று முறை இப்படிச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்க்ரப்:

சருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஸ்க்ரப் வேண்டுமானால் நீங்கள் தாரளமாக அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். அத்திப்பழத்தை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்று சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம்.

பேஸ் பேக் :

அத்திப்பழத்தில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.சூரிய கதிர்வீச்சினால் உண்டான நிற மாற்றங்களை போக்க பெரிதும் உதவிடும். அத்திப்பழம் பேஸ்ட் ஒரு ஸ்பூன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

டாக்ஸின் :

அத்திப்பழம் ஃபைபர் நிறைந்தது. இதனை முந்தைய தினம் இரவே தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். பின்னர் அதனை சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் எளிதாக வெளியேறும்.

தலைமுடி :

தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்தது அத்திப்பழம். தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தவிர்க்க முடியும்.