ஜோதிகா இப்படிபட்டவரா! உண்மையை உடைத்த டிடி!

தல அஜித்குமார் நடித்து ஹிட் லிஸ்டில் இடம்பிடித்த படம் வாலி. இந்த படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ஜோதிகா.

தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். நடிகை ஜோதிகா.

இவர், கமல், பிரபு, அஜித், விஜய், சூர்யா என பல முன்னனி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில், திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் இருந்தே நடிகர் சூரியாவும், ஜோதிகாவும் காதலில் கிசுகிசுக்கப்பட்டவர்கள். ஆரம்ப காலத்தில் இவர்கள் தங்களுடைய காதலை மறுத்து வந்தாலும், பின் காதலை ஒற்றுக்கொண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டு நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா குறித்து பிரபல டிவி தொகுப்பாளினி டிடி, பொதுமேடையில் பேசியுள்ளார்.

அதாவது, ஜோதிகா வீட்டில் நடைபெற்ற ஹோலி பண்டிகைக்கு டிடி சென்றிருந்த பொழுது, பலரும் வீட்டில் வீட்டில் இருக்க, ஜோதிகா தன் வீட்டில் வேலை செய்துக்கொண்டிருந்த வேலைக்காரர்களை அழைத்து முதலில் சாப்பிடுங்கள் என்றாராம்.

அவர்கள் சாப்பிடும் வரை குழந்தைகளை பார்த்துக்கொள்வது முதல், வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பது வரை அனைத்து வேலைகளையும் ஜோதிகாவே பார்த்துக் கொண்டிருந்தார் என்று டிடி சமீபத்தில் ஒரு பொது மேடையில் கூறியுள்ளார்.