தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூலை பதவி விவகுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் செயற்படுவதாகவும் இதனால் அவரை பதவி நீக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.