73 அரசியல் கைதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பாரிய குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களே தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைவாக முக்கியமான வழக்குகளை விரைவில் நிறைவு செய்ய முடியும்.
இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.