பெங்களூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற நடிகை ரஞ்சிதாவின் சொகுசு காரை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வாகனத்தில் சென்ற நபர் நடிகை என்பது வாகனத்தை சிறைபிடித்த பின்னரே பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அஞ்சேபாளையா அருகே நிலமங்கள சாலையில் குறித்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நாராயண கெளடா மற்றும் லக்ஷ்மி காந்த் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
குடும்ப வாழ்கையை துறந்து நித்யாநந்தா ஆசிரமத்தில் சிஷ்யையாக சேர்ந்த நடிகை ரஞ்சிதா, நித்யானந்த ஆசிரமத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்கு பின்னர் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்தி சென்ற பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர்.
பின்னர் நடிகை ரஞ்சிதாவின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து நித்தியானாந்தா ஆசிரமத்தில் இருந்து சிஷ்யர்கள் சிலர் வந்து அவரை மீட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் ரஞ்சிதா சென்ற காரின் ஓட்டுநர் போதையில் இருந்தது தெரியவந்தது.