வட மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளில் நாணயக்குற்றிகளுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதால் அங்கு நாணயக்குற்றிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
அந்த வகையில் நாளைய தினம் இரண்டு கோடி ரூபா பெறுமதியான நாணயக்குற்றிகள் வடக்கின் அனைத்து வங்கிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 2, 5 மற்றும் 10 ரூபா நாணயக்குற்றிகளே விநியோகிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாணயக்குற்றிகளின் பற்றாக்குறையால் அரச, தனியார் விற்பனை நிலையங்களில் சில்லறைக் காசுகளுக்கு பதிலாக டொபி, சொக்லேட் மற்றும் தீப்பெட்டி என்பன வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு ஆலயங்களின் உண்டியல்களில் இடப்படும் நாணயக்குற்றிகள் மீளப்பெறாமை, வீடுகளில் உண்டியல்களில் சேமிக்கப்படும் நாணயக்குற்றிகள் வங்கிகளில் வைப்பிலிடுவதற்கான தாமதம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.