பாட்னாவில் காதலியுடன் வீடியோ சாட்டிங் செய்யும்போது துப்பாக்கியால் சுட்டு 19 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது. ‘’பாட்னாவின் சாய்சாக் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவரும், அதேபகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவரும், காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுள்ளனர். மேலும், வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள ஆகாஷை, அவரது பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆகாஷுக்கும், அவரது தந்தை சஞ்சய் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கடுமையான வார்த்தைகளால் தந்தை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஆகாஷ், கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என, தனது காதலியுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இருவரும் வீடியோ கால் மூலம் பேசும்போது, ’தன் குடும்பத்தாரின் தொந்தரவுகள் தாங்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆகாஷ் கூறியுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி மூலம், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆகாஷின் உறவினரைத் தொடர்புகொண்டு, அவரது காதலி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர், இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். த
னது மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், யாரோ அவனைக் கொன்றுவிட்டனர் என்றும் ஆகாஷின் தந்தை சஞ்சய் குமார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பாட்னா காவல்துறை அதிகாரி மனு மகாராஜ் தெரிவித்துள்ளார்.