ரணில் சாட்டையடிப் பதில்…….!

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் என் கட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்று கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக பேசியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பிணை முறி விவகாரத்தில் என்னுடைய கட்சி சார்ந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

இதேவேளை, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சில நடைமுறைகளுக்கு அமையவே மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரனை நியமித்தேன்.

மறுபுறத்தில் அரசியலமைப்பு விவகாரம் குறித்து இதில் பேசிய அவர், நாட்டைப் பிரித்து சமஷ்டி வழங்கப்படவுள்ளதாகவும், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை இல்லாது செய்யப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தரப்பினர் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.

ஆனால், அவர்கள் கூறுவது போல் அவ்வாறு எதுவும் நடைபெறாது. ஒருமித்த நாட்டுக்குள் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்.

மகிந்த தரப்பினர் தேர்தலை முன்வைத்து இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றார்கள் என்றார்.