துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய அமைச்சர்?

அரச ஊடகங்களிலும் பிரதமரை விமர்சிக்கும் அளவுக்கு ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பன்னலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தனியார் ஊடகங்கள் கடுமையாக அரசாங்கத்தை விமர்சிக்கும் அளவுக்கு ஊடக சுதந்திரம் கிடைத்துள்ளது.

அதேவேளை தேர்தல் வன்முறைகளை குறைக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் துப்பாக்கிச் சூட்டில் இருந்த தான் தப்பியதாகவும் அகில விராஜ் காரியவசம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.