அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு மைத்திரி உத்தரவு!

பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளமையினால் அரசி இறக்குமதியை நிறுத்துமாறு அரச தலைவா் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அவா் இதனை தெரிவித்தாா்.

அதன்படி , தற்போது சந்தையில் நிலவும் அரிசி தொகை மற்றும் மற்றைய விடயங்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விவசாயம், கைத்தொழில் மற்றும் வர்த்தகம் போன்று கிராமப்புற பொருளாதாரம் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.