வவுனியாவில், நான்கு பிள்ளைகளையும் கணவனையும் கைவிட்டுவிட்டு மகளுக்கு பாடம் கற்பித்துக்கொடுக்க வீட்டுக்கு வந்த தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவருடன் காதல் வயப்பட்டு வீட்டைவிட்டுச் சென்றார் குடும்பப்பெண்.
வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவந்த 39வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் 16வயதுடைய பருவமடைந்த தனது பெண் பிள்ளை உட்பட 15, 8, 5 ஆகிய வயதுடைய நான்கு பிள்ளைகளையும் தனது கணவனையும் கைவிட்டு விட்டு தனது வீட்டில் வந்து மகளுக்கு ஆங்கிலம், கணிதம் பாடங்களை கற்பிக்கவந்த 26வயதுடைய ஆசிரியர் ஒருவருடன் காதல் வயப்பட்டு சென்றுள்ளார்.
கணவன் கூலிவேலைகளை மேற்கொண்டு வருபவர். குறித்த பெண் தனது நகைகள், சேகரித்து வைத்த ஒரு தொகைப் பணம், உடுபுடவைகள் அனதை் தையும் எடுத்துச் சென்றுள்ளார். தனது மகளின் உடுபுடவைகளையும் குறித்த பெண் அணிந்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற குறித்த பெண் தான் தனது பிள்ளைகள், கணவனை கைவிட்டுள்ளதாகவும் தனது காதலரான ஆசிரியருடன் வசிக்கவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.