வண்டில் சவாரிக்குச் சென்று திரும்பும்போது வாகனத்திலிருந்து தவறிவீழ்ந்தவர் அதிர்ச்சி காரணாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
நாகபூசணி அம்மன் கோயிலடி சண்டிலிப்பாயைச் சேர்ந்த சுப்பையா தவராசா (வயது – 65) என்பவரே நேற்றுக்காலை உயிரிழந்தார். இவர் 3 பிள்ளைகளின் தந்தை.
விசுவமடுவில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரிக்கு நண்பர்களுடன் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அன்றிரவு லொறியில் வண்டிலை ஏற்றி அதனுடன் திரும்பிவந்தனர்.
வீட்டில் இறங்கும்போது அவர் தடுக்குண்டு வீழ்ந்துள்ளார். அதன்போது இடுப்பு நோ ஏற்பட்டதாகக்கூறி அன்றிரவு சங்கானை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக அவர் உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காது நேற்றுக்காலை உயிரிழந்தார்.
முள்ளந்தண்டுமுண்ணாணில் ஏற்பட்ட அதிர்ச்சியே இறப்புக்குக் காரணம் என்று இறப்பு விசாரணையில் கூறப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை மேற்கொண்டார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.