பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை.
ஏனெனில் வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன.
இத்தகைய வேப்பிலை கசப்பாக இருக்கும். பொதுவாக இனிப்பாக வாய்க்கு சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களை விட கசப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும்.
இங்கு அதிகாலையில் வேப்பிலையையோ அல்லது வேப்பிலை நீரையோ வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வயிற்றுப் போக்கு
வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு வேப்பிலையை அப்படியே சாப்பிடுவதை விட, அவற்றைக் கொண்டு பானம் தயாரித்துக் குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
முதல் ரெசிபி – 3 டம்ளர் நீரில், 5 வேப்பிலைகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அது குளிர்ந்த பின் வடிகட்டி, அதில் தேன் சிறிது கலந்து உடனே குடிக்க வேண்டும்.
இரண்டாம் ரெசிபி – 3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளைப் போட்டு, 1 டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி, அந்நீரை காலை, மதியம் மற்றும் மாலையில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
மலேரியா
உங்களுக்கு மலேரியாவா? அப்படியானால் அதிலிருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு ஒரு டம்ளர் நீராகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையிலும், மதிய வேளையிலும் குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்.
இரத்த ஓட்டம் சீராகும்
வேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் அல்லது வேப்பிலை நீரைக் குடியுங்கள்.
இதய நோய் பக்கவாதம்
இதய நோய் பக்கவாதம் போன்றது தான் கரோனரி இதய நோயும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தான் கரோனரி இரத்த நோயால் பாதிக்கப்படுவார்கள். உடல் பருமன் உள்ளவர்கள் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்.