முகத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும்!

உங்கள் முகத்தில் அழகைக் கெடுக்கும் வகையில் கருமைப் படலம் உள்ளதா? அப்படி எப்படி போக்குவது என்று தெரியவில்லையா? அப்படியானால், இன்று தமிழ் போல்ட்ஸ்கை முகத்தில் உள்ள கருமைப் படலத்தை எப்படி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்குவது என விரிவாக கொடுத்துள்ளது.

சந்தன பவுடர் மற்றும் பால்

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் 1 1/2 டீஸ்பூன் பச்சை பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஸ்பூன் பயன்படுத்தி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் ஈரமான துணியால் முகத்தைத் துடைத்து எடுத்து, அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

சந்தனப் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு பௌலில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பின் இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து லைட் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

சந்தன பவுடர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர், 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இந்த இரண்டையும் நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள, கருமை நீங்கி முகம் பிரகாசமாக காணப்படும்.

சந்தன பவுடர் மற்றும் கற்றாழை ஜெல்

ஒரு சிறிய பௌலில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனை முகத்தில் தடவி, நன்கு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த, வெள்ளையாகிவிடலாம்.