சீனாவில் பணம் மற்றும் நகைக்காக 14 வயதில் மகன் உள்ள 38 வயது பெண்ணை 23 வயது இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Qionghai நகரை சேர்ந்த 38 வயதான பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயதில் ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில் 23 வயது இளைஞருடன் பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டதில் அவர் கர்ப்பமடைந்தார்.
இதையடுத்து இளைஞரை திருமணம் செய்து கொள்ள பெண் முடிவெடுத்தார்.ஆனால் வயதான பெண்ணை திருமணம் செய்து கொள்ள இளைஞரின் பெற்றோர் அவரை முதலில் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து ஏராளாமான நிலங்களும், 784,000 டொலர்கள் மதிப்புடைய கார் மற்றும் 100,000 டொலர்கள் ரொக்க பணத்தை இளைஞரின் பெற்றோரிடம் பெண் கொடுத்ததையடுத்து திருமணத்துக்கு அவர்கள் சம்மதித்தனர்.
திருமணத்தின் போது அதிகளவில் நகைகள் அணிந்திருந்த மணப்பெண் திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் புதுக்காரில் புறப்பட்டு சென்றார்.