நடிகை அளித்த புகாரில் தொழிலதிபர் கைது!

நடிகை அமலா பால் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமலா

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலா பால். சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன், தன்னை ஆபாசமாகப் பேசியதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் இன்று மாலை புகார் அளித்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அழகேசன் கைது செய்யப்பட்டார். புகார் கொடுத்த சில மணி நேரங்களுக்குள் காவல்துறை அழகேசனைk கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவருக்கும் என்ன பிரச்னையில் தகராறு ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.