கருப்பின ஆண் சுவிஸ் நாட்டு பெண்களை திருமணம் செய்வது சட்டவிரோதமானவை என Switzerland தரப்பு சட்ட திருத்தங்கள் பரிசீலனையில் உள்ளன.
இச்செய்தி உண்மையானவை அல்ல, ஆனால் ஆப்பிரிக்க செய்தி ஊடகங்கள் ஒரு கூக்குரலை ஏற்படுத்தியதாகும். மேலும் இக்கதை ‘கன்சர்வேடிவ் ஜனநாயகக் கட்சியின்’ கொள்கையாகும். அனால் அந்த கட்சியே இல்லை என்பது தான் வேடிக்கையான ஒன்று என குறிப்பிடப்படுகிறது.
இந்நாட்டின் உலகளாவிய ஊடகங்களை கண்காணிக்கும் சுவிட்சர்லாந்து அமைப்புகள், இந்நடவடிக்கையை, சமூக ஊடக தளங்களில் தெளிவாக இக்கதை பற்றி பறைசாற்றியது.
இந்த செய்தி ஆயிரம் முறை பகிரப்பட்டதாகவும், சுவிட்சர்லாந்தின் தலைமைச் செயலர் Nicolas Bideau, Tribune de Genève எனும் பத்திரிகையிடம் கூறியுள்ளார். நாட்டின் நற்பெயரை சேதப்படுத்தும் விதமாக இச்செய்தி அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், எதிர்காலத்தில் மத்திய அரசு இதுபோன்ற தவறான காரியங்களை தவிர்ப்பதில் மும்முரம் காட்ட வேண்டுமென்று அறிவுறுத்தினார். அனால் அதற்கு தக்க செயல்பாடுகள் இல்லை என்பதையும் எடுத்துரைத்தார்.