ஸ்பெயினின் பட்டத்து இளவரசியான 12 வயது லியோனார் நாட்டின் அரசியாக முடிசூடுவதற்கான முதல் நிலையை நேற்று எட்டியுள்ளார்.
ஸ்பெயின் மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயதேயான மகள் பட்டத்து இளவரசி லியோனாருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான Order of the Golden Fleece வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி மன்னர் ஃபிலிப்பின் 50-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் மாட்ரிட்டில் அமைந்துள்ள அரண்மனையில் நடைபெற்றுள்ளது.
பெருந்திரளான முக்கிய விருந்தினர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் லியோனாரின் தாயாரும் ராணியுமான Letizia பெருமை பொங்க மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
Golden Fleece விருதானது தற்போதைய பட்டத்து இளவரசி லியோனார் எதிர்காலத்தில் நாட்டின் ராணியாக முடிசூடுவதற்கு முதற்படியாக அமையும் என கூறப்படுகிறது.