வைரலாகும் சிம்புவின் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்பு. தற்போது இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார்.

அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு சற்று குண்டாக இருப்பார். அந்த படத்திற்காக ஏற்றிய உடம்பு என ரசிகர்கள் நினைதார்கள். ஆனால், AAA படத்தில் இன்னும் உடம்பினை ஏற்றி உடல் பருமனாக ஆனார் சிம்பு.

இந்த படம் படுதோல்வி அடைந்து பல சர்ச்சைகளில் சிக்கினார் சிம்பு. தற்போது தனது உடம்பினை குறைக்க ஜிம்மில் கடுமையாக உழைத்து வருகிறார் சிம்பு. ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் சிம்புவின் வீடியோ தற்போது வெளியாக வைரலாகி வருகிறது.