எனது குடியுரிமையை பறிப்பது குறித்து இன்று பேசுகின்றார்கள். எதிர் காலத்தில் அவர்கள் குடியுரிமையை பாதுகாத்துக் கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றவாளியாக இணங்காணப்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கு குடியுரிமை இல்லாது போகும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு இன்றைய தினம் மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் வழங்கியுள்ளார்.
என்னுடைய குடியுரிமையை பறிப்பது குறித்து இன்று அதிகளவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனது குடியுரிமை தொடர்பில் மத்திய வங்கிக்கு குற்றச்சாட்டிற்கு தொடர்புடைய நபர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்.
எனினும் எதிர்வரும் காலங்களில் அவர்கள் தங்கள் குடிரிமையை பாதுகாத்து கொள்ள நேரிடும். நாட்டில் தற்போது பொருட்களின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளது என்றார்.