இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டில் 4.4 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து செயற்படுவதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 3,84,628 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு 4,40,000 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.