தமது செல்லப் பிராணியான பூனையை கொன்று விட்டதாக மிருக வைத்தியர் ஒருவர் மீது பெண் ஒருவர் தெஹிவளை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெளிநாட்டுக்கு செல்லும் போது பராமரித்துக் கொள்ளுமாறு கூறி குறித்த பெண் தனது வளர்ப்பு பூனை, மிருக வைத்தியர் ஓருவரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்.
மலேசிய ரகத்தைச் சேர்ந்த பூனை ஒன்றை கொன்றதாக மிருக வைத்திய வைத்தியர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவர், சுமார் 40000 ரூபா பெறுமதியான பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 22ம் திகதி வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ள வேண்டியேற்பட்டதனால், தாம் நாடு திரும்பும் வரையில் பூனையை பராமரித்துக் கொள்ளுமாறு மிருக வைத்தியர் ஒருவரிடம் பூனையை ஒப்படைத்துள்ளார்.
பத்து நாட்களின் பின்னர் நாடு திரும்பிய பெண், வைத்தியரிடம் சென்று பூனையை கேட்ட போது, பூனை இறந்து விட்டதாகவும் அதனை புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பெண், பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
பூனை இறந்தமை தொடர்பில் தம்மை அச்சுறுத்தியதாக குறித்த வைத்தியரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளை பொலிஸார் விசாரணை செய்த போது, இறந்த பூனைக்கு பதிலாக மற்றுமொரு பூனையை வழங்க வைத்தியர் ஒப்புக் கொண்டதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இணக்கம் காணப்பட்டுள்ளது.