இலங்கையின் தென்பகுதியிலுள்ள அம்பாந்தோட்டையில் சீனா அமைத்து வரும் துறைமுகத்தை அந்நாட்டு இராணுவப் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று புதன்கிழமை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகத்தை அமைத்து வருகிறது. இத்துறைமுகம் மூலமாக சீனா துறைமுகம் சார்ந்த பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
துறைமுகப் பணிகள் சாராத இராணுவப் பணிகளை சீனா பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
எந்த வகையிலும் இந்தியாவின் பாதுகாப்பை விட்டுக் கொடுத்து விட மாட்டோம் என காட்டமாக தெரிவித்தார்