யுவதி ஒருவரை அச்சுறுத்தி பண மோசடி செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனது காதலியை ஆபாசமாக படமெடுத்து அதனை வைத்து மிரட்டி பணம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான இளைஞன் ஒருவரை அக்குரஸ்ஸ பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியும் இளைஞனும் கடந்த சில வருடங்களாக காதல் தொடர்பினை வைத்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞனால் ஆபாச புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இளைஞன் பிழையான முறையில் நடந்து கொண்டமையினால் அவருடனான தொடர்பை யுவதி முறித்து கொண்டுள்ளார்.
பின்னர் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.
பலமுறை யுவதியிடம், இளைஞன் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்களுக்கு பொலிஸ் நிலையம் செல்ல வெட்கப்பட்ட யுவதி, இறுதியில் ஒருவாறு முறைப்பாடு செய்துள்ளார்.
யுவதியின் முறைப்பாட்டிற்கமைய இளைஞனை கைது செய்துள்ளதுடன் அவரது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளனர்.