சிறுமி கொலை: இளைஞருக்கு தூக்கு!

தமிழ்நாட்டில் 4 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த இளைஞருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், தூக்கு தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகள் பச்சையம்மாள் (4).

தனியார் மழலையர் பள்ளியில் படித்து வந்த பச்சையம்மாள் கடந்த 10.6.2013 அன்று மாயமானார்.

இது குறித்து பரமசிவம் பொலிசிடம் புகார் அளித்த நிலையில் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஆர்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பச்சையம்மாள் சடலமாக மீட்கப்பட்டர்.

சிறுமியின் மரணம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நடந்த இறுதிகட்ட விசாரணையில் பச்சையம்மாளை கடத்தி கொன்றது மணிகண்டன் தான் என உறுதியானது.

இதையடுத்து மணிகண்டனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், சாகும் வரை தூக்கு தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.