பொதுமக்கள் முறுகல்: முல்லைத்தீவில் பதற்றம்!

முல்லைத்தீவு, கோட்டைக்கனி பகுதியில் மகாவலி வேலைத்திட்ட அதிகாரிகள் பொதுமக்களின் காணிகளை இன்றைய தினம் அளவீடு செய்வதில் ஈடுபட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நில அளவீடு செய்யும் பகுதியில் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகாவலி வலயம், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வீதி உள்ளடங்கலாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகப் பகுதிவரையும் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டைக்கனி, ஆமையங்குளம், ஆலங்குளம், பகுதியில் இன்று நில அளவை அதிகாரிகளினால் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் இந்த நடவடிக்கை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் அப்பகுதியில் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.