உலகம் முழுவதும் நேற்று தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை மக்கள் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் சந்திர கிரகணத்தின் போது தாம்பூல தட்டின் மேல் வைக்கப்பட்ட உலக்கை ஆடாமல் அசையாமல் நின்ற ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூரின் பூதலூர் ஒன்றியம் வீரப்புடையான்பட்டி உடையார் தெருவில் வசிக்கும் மக்கள் சந்திர கிரகணத்தின் போது வீடுகளின் முன்பு கோலமிட்டு தாம்பூல தட்டு ஒன்றின் மீது உலக்கையை செங்குத்தாக நிற்க வைத்தனர்.
கிரகணம் பிடிக்கும் போது உலக்கை செங்குத்தாக ஆடாமல் அசையாமல் நிற்குமாம், கோவில்பத்து சிவன் கோவில்தெருவில் ஒரே ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட உலக்கை அப்படியே இருந்தது.
இதை கண்ட கிராம மக்கள் உலக்கையையும், முழு சந்திரனையும் வணங்கினர்.
வீட்டின் முன்வைத்திருந்த உலக்கையால் தென்னை மரத்தில் குத்தினால் அந்த மரம் அதிகமாக காய்க்கும் என்பது அவர்களது நம்பிக்கை.