தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் – தமிழ் நாட்டுக்கு இடையில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் மன்னார் புதிய பஸ் தரிப்பு நிலையம் முன்பாக நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
இதன் முதற்கட்டமாக தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது
மன்னார் பிரதேசத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றன.
மன்னார் மாவட்ட விவசாயக் குளங்களை புனரமைத்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.