7 தசாப்தகால உறவு: அமெரிக்க தூதுவரின் அறிக்கை!

பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவையும் இது குறிக்கின்றது.

இதை கௌரவிக்கும் முகமாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகமானது அடுத்த 12 மாதங்களுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளது.

நாட்டின் எல்லாப் பின்புலங்களையும் சகல மதங்களை சார்ந்த இலங்கையர்களையும் இணைத்து மேற் கொள்ளப்படும் கலாச்சார நிகழ்வுகளையும் கல்வி சந்தர்ப்பங்கள், மற்றும் சமூக ஈடுபாடுகளை உள்ளடக்கிய, #USASL70 நிகழ்ச்சிகள், 7 தசாப்தகால ஐக்கிய அரசுகள் இலங்கை உறவுமுறையின் மதிப்பு மற்றும் பங்காண்மையின் அம்சங்களினை முக்கியத்துவப்படுத்துகிறது.

இந்த நிலையில் ‘எமது தூதரகச் சமூகமானது எமது இலங்கை நண்பர்கள் மற்றும் பங்காண்மையாளர்களுடன் இந்த மிகச் சிறந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதில் மகிழ்வடைகிறது’ என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசப் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

#USSL70 என்பது இலங்கைக்குத் திரும்புவதற்கு அமைதிப்படையின் இருதரப்பு ஒப்பந்தக் கைச்சாத்திடுதல் போன்ற புதிய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு முனைப்புக்களையும் எடுத்துக்காட்டும்.

அமெரிக்க முகவராலயத்தின் ஆதரவளிப்புடன் 21ஆம் நூற்றாண்டுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை இளைஞர்களைத் தயார்ப்படுத்த உதவும் அதேவேளையில் இலங்கையின் பாற்பண்ணை உற்பத்தி தொழிலை உற்பத்தி திறனானதாகச் செய்வதற்கு விவசாய உதவிகளும் வழங்கப்படும்.

‘எமது #USSL70 நிகழ்ச்சித்திட்டம், நம் வரலாற்றை பின்நோக்கிப் பார்ப்பதற்கு மேலாக, பிராந்தியத்தில் சகிப்புத்தன்மை மற்றும் வளத்தின் ஒரு ஒளிக்கீற்றாக இருக்கக்கூடிய வகையில், ஒரு நிலையான ஜனநாயகத்துடனான இலங்கையின் எதிர்காலத்திற்கான ஒரு பார்வை நோக்கு பற்றியதாகும்.

இன்னும் 70 வருடங்களிலும் அதற்குப் பின்னும் அமெரிக்கா அந்தப் பார்வை நோக்குகளை யதார்த்தமாக்குவதற்கு இங்கே அது உதவி செய்யும்” என தூதுவர் கெசாப் குறிப்பிட்டார்.