தனது தந்தையின் கண்ணீரை சில தினங்களுக்கு முன்னரும் தான் கண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை சேவாகம பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மொரகஹாந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்து விட்ட போது தனது பல வருட கனவு நனவாகியதாக தமது தந்தை கூறியதாகவும், நீர்த்தேக்கத்தில் நடந்துசென்று கொண்டிருந்த போது, தனது பிள்ளைகளை விட மொரகஹாந்த நீர்த்தேக்கத்தை நேசிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சத்துரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்கள் பசியை உணரும் போது அதனை தனது தந்தையும் உணருவார் எனவும் மக்கள் கண்ணீர் சிந்தும் போது தந்தையும் கண்ணீர் சிந்துவார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சத்துரிக்கா குறிப்பிட்டுள்ளார்.