உலகிலேயே தனி நபர் வருமான வரி அதிக அளவு உள்ள நாடு?

உலகளவில் அதிகபட்சமாக தனிநபர் வருமான வரி விதிக்கும் நாடுகள் பற்றி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் 55.95 சதவிதம் தனிநபர் வருமான வரி விகிதமாக விதிக்கப்படுகிறது, இது 2016ஆம் ஆண்டு வரை 50.65 சதவிதமாக இருந்தது.

இங்கு வசிக்கும் பிற நாட்டவர்கள் ஜப்பானில் பெறும் வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்.

நிரந்தர குடியுரிமை, வேலை நிமிர்த்தமாக இங்கு உள்ளவர்கள், தாங்கள் பெறும் இதர வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டியது அவசியம்.

இத்தாலி

இத்தாலியில் தனிநபர் வருமான வரி 48.80 சதவிதமாகும். இங்கு வருமான வரியானது தேசிய வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி என இருவகையாக பிரிக்கப்படுகிறது.

தேசிய வருமான வரி என்பது அனைத்து விதமான வருமானத்திற்கும் ஒருங்கிணைந்த வரியாக விதிக்கப்படுகிறது.

மேலும், மண்டல வருமான வரி மற்றும் நகராட்சி வருமான வரி என குடியிருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் வரி விதிக்கப்படுகிறது. இங்கு அதிகபட்ச வரியாக, 1996ஆம் ஆண்டில் 51 சதவிதம் விதிக்கப்பட்டது.

ஜேர்மனி

ஜேர்மனியில், வருமான வரி விகிதமானது தற்போது 47.50 சதவிதம் ஆகும். அனைத்து ஜேர்மனியக் குடிமகன்களும், உலகளாவிய வருமானமாக ஆண்டிற்கு 8820 யூரோ பெறுபவர்களாக இருந்தால், அவர்கள் கட்டாயமாக வருமான வரி செலுத்த வேண்டும்.

இதில் விவசாயம், வனவியல், வர்த்தகம், தொழில்முறை வருமானம் போன்றவை அடங்கும். இங்கு அதிகபட்சமாக வருமான வரி விகிதம் 2016ஆம் ஆண்டு வரை 50.06 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ்

பிரான்ஸில், வருமான வரி விகிதம் பூஜ்ஜியம் முதல் 45 சதவிதமாக உள்ளது. இங்கு வசிக்கும் அனைத்து குடிமக்களும் வரி செலுத்துவது கட்டாயம்.

திருமணமாகாதவர்களின் ஆண்டு வருமானம் 2,50,000 யூரோ வரையிலும், திருமாணமாகியிருந்தால் ஆண்டு வருமானம் 50,00,000 யூரோ வரையிலும் இருக்குமானால் 45 சதவிதமும், கூடுதல் உபரி வரியாக 4 சதவிதமும் செலுத்த வேண்டும்.

சீனா

சீனாவில் தனிநபர் வருமான வரி விகிதம் 45 சதவிதமாக உள்ளது. இங்கு தனிநபர் வருமான வரி விகிதம் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பள வருமானம், குத்தகை வருமானம், வாடகை வருவாய் போன்றவை அடங்கும்.

பிரித்தானியா

பிரித்தானியாவில், தனி நபரின் வருமான வரி விகிதமானது, உலகளாவிய ஆண்டு வருமானம் மற்றும் மூலதன வருவாயைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

இங்கு தனி நபரின் அடிப்படை வருமான வரியாக 20 சதவிதமும், ஆண்டு வருவாய் 33,500 பவுண்டுக்கு மேல் இருக்குமானால் 45 சதவிதம் வரையிலும் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவில், தனி நபர் பெரும் வருவாய் 4,06,751 டொலருக்கு அதிகமாக இருக்குமானால் கூட்டாட்சி வரியாக 39.60 சதவிதமும், மாநில வரியாக கூடுதல் வரியும் செலுத்த வேண்டும். இந்த வரி விகிதமானது, 2004ஆம் ஆண்டு முதல் 2016 வரையில் 36.42 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா

தென் கொரியாவில், தனிநபரின் வருமான வரி என்பது இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. அதில் உலகளாவிய வருமானத்திற்கு 6 சதவிதம் முதல் 40 சதவிதம் வரையிலும்,

கொரியாவில் வருவாய் பெறுவதற்கு 10 சதவிதமும் வருமான வரி விதிக்கப்படுகிறது. தற்போதைய வருமான வரி விகிதம் இங்கு 38 சதவிதமாகும்.

கனடா

கனடாவில் தனி நபரின் ஆண்டு வருமானம் 45,916 கனடியன் டொலர்கள் வரை இருந்தால், 33 சதவிதம் வரி செலுத்த வேண்டும்.

இங்கு வசிப்பவர்களின் வருமான வரியானது, உலகளாவிய வருமான வரியையும் சேர்த்து ஆகும். மேலும், கூட்டாட்சி வருமான வரி, மாநில வருமான வரி மற்றும் பிராந்திய வருமான வரி ஆகியவற்றையும் செலுத்த வேண்டும்.

பிரேசில்

பிரேசிலில், தனி நபர் வருமான வரி விகிதம், சராசரியாக 27.50 சதவிதம் ஆகும். இங்கு வருமான வரி என்பது, பிரேசில் நாட்டவர்களின் உலகளாவிய வருமானத்திற்கு ஒரு விகிதமாகவும், பிரேசிலில் குடியிருக்கும் பிறநாட்டவர்களின் வருமானத்திற்கு வேறுவிதமாகவும் வரி விதிக்கப்படுகிறது.

தனி நபரின் ஆண்டு வருமானம், 1903.99 பிரேசிலியன் ரியலுக்கு மேல் இருந்தால் 27.50 சதவிதம் வரி செலுத்த வேண்டும்.