தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செய்த சூப்பரான காரியம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் பணம் கேட்டதால் தாலி கட்டும் நேரத்தில் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேந்தவர் அனில் சக்சேனா. இவர் இங்குள்ள மருத்துவ கல்லூரி பேராசிரியராக உள்ளார். இவரது மகள் ராசி. பல் மருத்துவரான இவருக்கும் ஷாக்ஷம் ஷடோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்காக மாப்பிள்ளைக்கு கிலோ கணக்கில் தங்கம் மற்றும் சொகுசு கார் அளிக்கப்பட்டது.

ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக மேலும் 1 கோடி ரூபாய் கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் என அடம்பிடித்தார் மாப்பிள்ளை. இதனால் அதிருப்தி அடைந்த மணமகள் ராசி, தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என கூறி தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தினார். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இது சம்மதமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்கவில்லை. இறுதியில் திருமணம் நின்றதால் மணமகன் வீட்டார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.