விசித்திர சிறுவன் இலங்கையில்!

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் வைக்காமலேயே பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக குறித்த குழந்தையின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரிவருவதாவது,

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் 2010ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 3ஆம் திகதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பொதுவாக குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பெயர் வைப்பதற்கு பெற்றோருக்கு அவகாசம் வழங்கப்படும்.

எனினும் குழந்தைக்கு பெயர் வைக்காமலேயே குழந்தை பிறந்து மறு தினம் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பெலமதுளை பகுதியைச் சேர்ந்த பெற்றோருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் குறித்த குழந்தைக்கு 8 வயதாகும் வரை பெயர் வைக்கப்படவில்லை என்றும், இதனால் பாடசாலையில் சேர்ப்பதற்கு சிரமப்படுவதாகவும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது குழந்தையை பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிறப்புச்சான்றிதழ் என்பது ஒருவருடைய பெயரையும், பிறந்த திகதி, இடம், என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே வழங்கப்படுகின்றது.

எனினும் பிறந்து 8 வயது வரை பெயரில்லாம் ஒரு சிறுவன் வளர்ந்து வருவதையிட்டு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.