மாமியுடன் நெருக்கமான லண்டன் மாப்பிளை!!

வவுனியாவில் துாக்க மாத்திரரை பருகிய நிலையில் திருமணமாகி ஒரு சில நாட்களேயான இளம் பெண் ஒருவர் அவரச சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து வந்த 32 வயதான இளைஞனுக்கும் வவுனியாவைச் சேர்ந்த 21 வயதான யுவதிக்கும் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிவடைந்து கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வீடு ஒன்றை எடுத்து தங்கியிருந்த ஜோடிகளில் மணப் பெண் நேற்று மதியம் அதிக துாக்க மாத்திரகளை உட் கொண்ட நிலையில் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துாக்க மாத்திரை அருந்துவதற்கு முன் நேற்று முன்தினம் மாலை தனது பெரியம்மாவுக்கு பைபர் மூலம் தனது அம்மாவால் தனக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது,  அம்மா தன்னை தனது சுயநலத்துக்காக படுகுழியில் தள்ளிவிட்டார் எனவும்  தகவல் அனுப்பியுள்ளாராம்.

இறுதி யுத்தத்தில் கணவனை இழந்து இரு பெண் பிள்ளைகளுடன் தாயார் வவுனியாவில் வசித்து வந்த நிலையில் குறித்த இளைஞன் வவுனியா தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய பின்னர் வெளிநாடு சென்றுள்ளார். குறித்த தொலைத்தொடர்பு நிலையத்தில் பணியாற்றிய வேளையில் தாயாருடன் பழக்கம் இருந்ததாகவும் அந்த பழக்கத்தை வைத்தே தாயார் குறித்த இளைஞனுக்கு தனது மகளை திருமணம் முடித்து வைத்ததாகவும் தெரியவருகின்றது.