ஜே.வி.பி கட்சியின் அடுத்த தலைவர் பிரபல பாடகரா?

ஜே.வி.பி கட்சியின் அடுத்த தலைவராக பிரபல பாடகர், ஜிப்ஸீஸ் இசைக் குழுவின் தலைவர் சுனில் பெரேரா தெரிவாகக் கூடும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர், பாடகர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி கட்சி தற்பொழுது ஓர் கூத்துப் பட்டறையாக மாற்றமடைந்துள்ளதாகவும், ஜிப்ஸீஸ் இசைக் குழுவின் தலைவர் சுனில் பெரேரா ஜே.வி.பி கட்சியின் அடுத்த தலைவராகக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் ஜே.வி.பி.யின் விடுதலை கீதங்களில் ஒன்றாக ஓயே ஒஜாயே (ஜிப்ஸீஸ் இசைக்குழுவின் புகழ்பெற்ற வேடுவர் பாடல்) பாடல் இசைக்கப்படக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் ஜே.வி.பி. கட்சியை பிரபல இசைக்கலைஞர் அமரர் குணதாச கபுகே போன்ற சிறந்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்தார்கள் என மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.