ஈ.பி.டி.பி உறுப்பினரிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில்!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்புக்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணத்தில் போலி நகை அடகு வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருக்கு எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் போலி நகையை அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வழக்கின் தீர்ப்பு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், நீதிபதி எதிர்வரும் 08 ஆம் திகதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.