கொழும்பில் கோர விபத்தில் சிக்கி பெண் மரணம்!!

திடீர் விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 வயதான குறித்த பெண் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற விபத்தில் தலையில் காயமடைந்த நிலையில் குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கடுவெல, கொத்தலாவல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான லஹிர என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுகேகொட ஸ்டென்லி திலக்கரத்ன மாவத்தையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் 10 மாதங்களுக்கு அதிகமான காலப்பகுதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.