சசிகலா மற்றும் தினகரனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெ.தீபா பொலிசில் புகார் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, சென்னை பொலிஸ் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், சமூகவலைதளங்கள் மூலம் எனக்கு நேரடியாக பல மிரட்டல்கள் வருகின்றது. சிலர் என் ஃபேஸ்புக் பக்கத்துக்கே வந்து என்னை மிகவும் இழிவாக விமர்சனம் செய்கிறார்கள்.
மிரட்டல் விடுவதும் இழிவான விமர்சனம் செய்வதும் பெரும்பாலும் சசிகலா மற்றும் தினகரனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில் உள்ளவர்கள் தான் என்பதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தீபா கூறுகையில், இதுவரை என் மீது வன்மமான பேச்சுகள் பரப்பப்படுவதாக பலமுறை புகார் அளித்திருக்கிறேன் எந்த நடவடிக்கையும் இல்லை, இந்த முறை ஆதாரத்துடன் புகார் அளித்திருக்கிறேன்.
தினகரன் ஆட்கள் என்னடைய முகநூல் பக்கத்திலேயே வந்து அறுவறுப்பான கருத்துகளை பதிவிட்டு வருவதுடன் கொலை மிரட்டலும் விடுக்கின்றனர்.
என் மீது சசிகலா குடும்பத்தாருக்கு இருக்கும் வன்மத்தால் அவர்கள் என்னை கொலை செய்துவிட வாய்ப்புள்ள நிலையில் பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக தீபா தெரிவித்துள்ளார்.