பாலியல் தாக்குதலுக்கு ஆளான நடிகை!

பிரபல திரைப்பட நடிகை சனுஷா ரயிலில் பயணிக்கும் போது அவரை பலாத்காரம் செய்ய நபர் ஒருவர் முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் எத்தன், ரேணுகுண்டா, அலெக்ஸ்பாண்டியன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சனுஷா.

இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு சனுஷா கன்னூரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த அண்டோ போஸ் (40) என்ற நபர் தூங்கி கொண்டிருந்த சனுஷாவின் உதட்டில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

யாரோ தன் மீது கை வைப்பதை பார்த்து தூக்கத்திலிருந்து எழுந்த சனுஷா விளக்கை போட்டுள்ளார்.

அப்போது எதிரில் போஸ் நின்றிருந்த நிலையில் அவர் கையை பிடித்து சனுஷா தடுத்துள்ளார்.

ரயிலில் பல பயணிகள் இருந்தபோதும் யாரும் சனுஷாவுக்கு உதவ முன்வரவில்லை. அங்கிருந்த உன்னி மற்றும் ரஞ்சித் ஆகிய இருவர் மட்டுமே உதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக ரயில்வே பொலிசில் சனுஷா புகார் அளித்த நிலையில் அண்டோ போஸை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

சனுஷா கூறுகையில், என்னை காப்பாற்ற கூறியும் இரண்டு பேரை தவிர யாரும் உதவ முன்வரவில்லை, எல்லாரும் தூங்குவது போன்று நடித்தார்கள்.

மக்களின் போராட்டம் எல்லாம் பேஸ்புக்கில் தொடங்கி அங்கேயே முடிந்துவிடும் போல உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.