ரஜினிகாந்தின் வழக்கமான ‘பாபா’ முத்திரையில் இருந்து தாமரை மற்றும் பாம்பு என ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு புதிய வடிவத்துடன் அறிமுகமாகியுள்ளது.
ரஜினிகாந்த் ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிவித்து தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்தார்.
அதே வேகத்தில் ஜனவரி 4-ம் தேதி அவரது வழக்கமான ‘பாபா’ முத்திரை லோகோவாக கொண்ட மொபைல் ஆப் ஒன்றையும் வெளியிட்டார்.
இதனால், ரஜினியின் அரசியல் கட்சி சின்னமாக பாபா முத்திரை தேர்வுசெய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் ஏற்கெனவே ரஜினியுடன் பா.ஜா.க-வை இனைத்து சந்தேகத்துடன் தமிழகத்தில் ஆங்காங்கே பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது பாபா முத்திரையில் இடம்பெற்றிருந்த தாமரை சின்னம் அந்த சந்தேகத்தை மேலும் வலிமை பெற வைப்பதாக கருதிய நிலையில் உடனடியாக தாமரை படம் நீக்கப்பட்ட புதிய பாபா முத்திரை ரஜினி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது.
மேலும், அதே முத்திரையில் பாம்பு சுற்றியிருக்கும்படி இருந்ததையும் பலர் விமர்சித்தனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக இந்த பாம்பு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ரஜினியின் உத்தரவின்பேரில் லோகோ-விலிருந்து பாம்பு நீக்கப்பட்டுள்ளது. தற்போது, பாம்புக்கு பதில் ஒரு வட்டம் மட்டுமே உள்ளது.
தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் குறித்து இன்று (02.02.2018) அறிவிப்பில் மன்றத்தின் முத்திரையில் பாம்பு இடம்பெறவில்லை.